• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது – கிரேசி மோகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

June 10, 2019 தண்டோரா குழு

ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது என கிரேசி மோகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகனுக்கு இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது. ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது. அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க