• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்வையாளர்களை வியக்க வைத்த கண்காட்சி

June 8, 2019

குழந்தைகளுக்கு அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் மரகட்டைகளால் வடிவமைக்கப்பட்ட கண்காட்சி பொருட்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

வார விடுமுறை நாளான இன்று லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோவை புருக் பீல் மாலில் சின்மயா வித்யாலயா சார்பில் மர கிளைகளை வைத்து கண்காட்சிகள் நடத்தபட்டது.இக்கண்காட்சியானது சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு அறிவியல் திறனை வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று பண்ணை ஓலை, மரத்தூள், தென்னங்குருத்து,கொட்டாங்குச்சி,பாக்குமட்டை உள்ளிட்ட தேவையற்ற மர துகள்களை கொண்டு,விலங்கு மற்றும் பறவைகளின் உருவம், மனிதர்கள் உருவம்,கப்பல்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்களை வியக்க வைத்தது.இதன் மூலம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஒலிக்கபட்டு முன்னோர்கள் காலத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர இது ஒரு வாய்ப்பாக அமையும் வகையில் இக்கண்காட்சியானது நடத்தபட்டு வருவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க