• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொல் பொருட்களை பெங்களூர் கொண்டு செல்ல இடைக்காலத் தடை

September 30, 2016 தண்டோரா குழு

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல் பொருட்களை பெங்களூர் கொண்டு செல்ல,உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சிவகங்கை மாவட்டம் கீழடி என்னும் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஆய்வின் போது, பழங்கால பாசி, பவளம்,குடுவை, பானை ஓடுகள் உள்ளிட்ட பண்டைய தமிழர்களின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை பெங்களூருவில் உள்ள தேசிய அகழ்வாராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அகழ்வு ஆய்வின் போது கீழடியில் ஒரு நகரம் இருந்தற்கான சான்றுகள் மற்றும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. கீழடியில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மாறாக, மத்திய அரசு, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை பெங்களூருவில் உள்ள தேசிய அகழ்வாராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், கீழடியில் நிரந்தர அகழ்வாராய்ச்சி மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கனிமொழி மதி குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் நாகமுத்து மற்றும் முரளிதரன் அடங்கிய அமர்வு, கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்த தொல்பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க