• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.கவுக்கு ஒரே தலைமை தேவை – அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

June 8, 2019 தண்டோரா குழு

அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் மற்றொருவரை நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவைவிட முதலமைச்சர் பழனிசாமி அதிக திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அ.தி.மு.கவுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். 2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்.

அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதிகாரமிக்க ஒருவர் தலைமை தாங்க வேண்டும்.தினகரன் என்ற மாயை இப்போது இல்லை என தெரிந்து விட்டது. தேர்தலில் முக்கிய தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது .

அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை. நான் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் உட்பிரச்சினையல்ல. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் 10 முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.

வெற்றி பெற்ற 9 எம்.எல் ஏக்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தவில்லை. தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு போதும் விலக மாட்டார்கள் என கூறினார்.

ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க