• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

June 7, 2019

அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது எனவும், கூட்டணியில் எந்த பிரச்சணையும் இல்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சணை உள்ளிட்டவை தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

தமிழ்நாட்டை இபிஎஸ், ஒபிஎஸ் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர் என தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையான வறட்சி, மழையின்மை காரணமாக குடிநீர் பிரச்சணை ஏற்பட்டது.அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்க அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தப்பட்டது. 400 கோடி ரூபாய் குடிநீர் வழங்கல் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லாரி மூலம் தண்ணீர் விநியோகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட குடிநீர் பிரச்சணையை தீர்ப்பது தொடர்பாகவும், நிபா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறையாக குடிநீர் வழங்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர், அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டப்படும். உள்ளாட்சி தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் துரிதமாக பணிகளை செய்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அதிமுக கூட்டணி நன்றாக உள்ளதாகவும், எந்த பிரச்சணையும் இல்லை எனவும் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.

மேலும் படிக்க