• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் தோல்வி -திருப்பூர் மாணவி தற்கொலை

June 5, 2019

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ எனும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 14,10,754 மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் நீட் எழுதியவர்களில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி என்ற மாணவி அகில இந்திய அளவில் 57-வது இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், திருப்பூரில் நீட் தேர்வு எழுதிய ரிதுஸ்ரீ எனும் மாணவி தேர்ச்சியடையாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி 12-ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க