• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது – கமல்ஹாசன்

June 1, 2019 தண்டோரா குழு

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக்கொள்கையில், பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகமெங்கும் இதற்கு எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மைய தலைவர்
கமல்ஹாசன்,

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்றார். அப்போது, தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படாதது குறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை. தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை. பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக நான் ஆசைப்படுவது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க