• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் துறை, பொதுமக்கள் நல்லுறவில் பாலமாக திகழ்ந்த கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஐ சுந்தர்ராஜன் பணி நிறைவு !

May 31, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரராஜன் இன்று ஓய்வு பெற்றார்.

கோவை மாவட்ட காவல்துறையில் 1986ல் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர் சுந்தரராஜன். தாடகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த இவர் கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 13 வருடங்களாக கோவை மாவட்ட உளவுத்துறையில் பணியாற்றி உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவில் பாலமாக திகழ்ந்தவர்.

இந்நிலையில், தனது 33 ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து முடித்து இன்றுடன் பணி நிறைவு செய்தார். இதையடுத்து அவருக்கு துடியலூர் காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இன்று சிறப்பாக தனது பணியை நிறைவு செய்த அவருக்கு கோவை போஸ்ட் நிறுவனம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மேலும் படிக்க