செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. மே 31ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதற்கிடையில், இப்படத்தை கொண்டாடும் விதமாக சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் 215 அடியில் கட் அவுட் வைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன் பூஜையுடன் வேலைகளை தொடங்கினர். தற்போது அந்த பணி முடிந்து கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடங்கத்தில் உலகிலேயே நீளமான கட்அவுட் அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் வைத்து கொண்டாடினார்கள். இவருக்கு முன்பு கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய கட்அவுட் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது