• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒப்பணக்கார வீதியில் 5 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்

May 29, 2019 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தனம் வணிக கடைக்கு மாநகராட்சி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் சரவணா செல்வரத்னம் ஆயத்த ஆடை வளாகத்திற்கு இன்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மொத்தம் ஐந்து தளம் கொண்ட இந்த கடையில் வாகன நிறுத்தத்திற்கு பயன்படுத்த வேண்டிய கீழ் தளத்தை குடோனாகவும் , கடைக்கு முன்னாள் இருக்கின்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக கடை பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் நால்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பானது எனக்கூறி உயர்நீதிமன்றம் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அதிகாரிகள் 5 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க