• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் பணிபுரிந்த 19 பேர் கைது

May 29, 2019 தண்டோரா குழு

கள்ளத்தோணி மூலம் உரிய ஆவணங்களின்றி திருப்பூர் வந்து பணிபுரிந்த வங்காளதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மாநில மட்டுமல்லாது வெளி நாட்டினரை சேர்ந்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் விசாரணையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 இளைஞர்கள் கள்ளத்தோணி மூலம் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களின்றி பணிபுரிந்து வருவதாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர்களை 15 வேலம்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க