• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தி கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும் – ரஜினி

May 28, 2019 தண்டோரா குழு

ராகுல் காந்தி கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நேரு, இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் வரிசையில் மோடி ஈர்ப்புமிக்க தலைவராக திகழ்கிறார். இந்தியாவை பொருத்த வரை தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் மோடி அலைக்கு எதிரான அலை வீசியது. எதிரான அலை வீசும் போது யாராக இருந்தாலும் தோல்வி ஏற்ப்படும். மோடிக்கு எதிரான அலையுடன் சென்றவர்கள் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக தோல்வி அடைந்ததற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் காரணமாக அமைந்தது.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். முதல் திட்டமாக கோதாவரி-கிருஷ்ணா-காவிரி இணைப்பு இடம்பெற வேண்டும்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் முக்கியம். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகக் கூடாது. ராகுல் காந்தி கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை. அதை ராகுல் காந்தி சரி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி மிகவும் பழமையான கட்சி, ராகுல்காந்தி போன்ற இளம் தலைவர்கள் கட்சியை வழி நடத்த வேண்டும்என்றார்.

மேலும், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திய ரஜினிகாந்த்கட்சி தொடங்கிய சில மாதங்களியே கமல்ஹாசன் 3 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றது பெரிய விஷயம் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க