• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை புங்கம்பாளையத்தில் 5 மணி நேரமாக வீணாகும் குடிநீர் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

May 27, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராமத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 மணி நேரமாக குடிநீர் வீணாகி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராம் உள்ளது. இக்கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு அமைப்பட்ட குடிநீர் குழாய் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தொண்டாமுத்தூருக்கு குடிநீர் ஆதாரமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்குழாயில் இன்று மதியம் நான்கு மணியளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 5 மணி நேரமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று
கொண்டிருக்கிறது.

ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் வேளையில் குடிநீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருப்பதால் உடனடியாக இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க