• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு

May 27, 2019 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகே தாயார் தகாது உறவு காரணமாக 3 வயது சிறுமியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகள் ஸ்ரீதேவி (3) இந்த சிறுமி இன்று சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தாயாரை பிடித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் தாயாருக்கும் அப்பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளதும் இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியான தமிழ்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க