• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே தாய் கண்முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு

May 25, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே
தாய் கண்முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ. இவரது மனைவி சித்ரா இவர்களின் 7 வயது மகள் ரஞ்சனா (எ) ரஞ்சனி அங்குள்ள அரசு பள்ளியில் 2″ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தாய் சித்ரா மகள் ரஞ்சனியை அழைத்து கொண்டு பொள்ளாச்சி சென்று விட்டு பேருந்தில் நவமலை சென்றனர். பேருந்து நின்றவுடன் இறங்கி இருவரும் வீட்டிற்கு நடந்து சென்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது அலறியடித்து ஒடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது.தாய் சித்ரா கதறி அழுது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்ததபோது யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. பின்னர் படுகாயமடைந்த சிறுமியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க