• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிகவேக வந்து மரத்தில் மோதிய சொகுசுகார் – 4 பேர் காயம்

May 24, 2019

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளைத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்து குளத்துபாளையம் பிரிவு அருகே புளியமரத்தில் அதிபயங்கர சத்தத்துடன் மோதியுள்ளது.

அருகே வீட்டில் துங்கி கொண்டு இருந்த பொது மக்கள் ஒடிவந்து பார்த்த பொழுது கார் உருக்குழைந்து . 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.

உடனடியாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொது மக்களே ஒன்று கூடி அனைவரையும் மீட்க முயற்சி செய்தனர். பின்னர் காரில் இருந்த ஜீவா, நந்தகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் காரை ஒட்டி வந்த சிவபாலன் என்பவர் காரில் சிக்கிக் கொண்டார். சுமார் 1 மணி நேரமாக அவரை மீட்க பொக்கலைன் இயந்திரம் உதவியுடன் போலீசார் முயன்றனர். பின்னர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும் வடவள்ளி பகுதியை அதிமுக பிரமுகர்கள் என தெரியவந்தது. அதிகாலை என்பதால் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக சாலை என்பதால் அசம்பாவிதம் எதும் நடைப்பெறவில்லை. இது தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க