• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க-விற்கு ஏன் வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் வருந்துவார்கள் – தமிழிசை சவுந்திரராஜன்

May 23, 2019 தண்டோரா குழு

பா.ஜ.க-விற்கு ஏன் வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் வருந்துவார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன், பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். தமிழக மக்களிடம் வாக்குகளை ஏன் பெறவில்லை? என நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். நல்ல திட்டங்களை தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்தார்கள். தோல்வியடைந்தாலும் தூத்துக்குடி மக்களுக்கு எனது சேவை தொடரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் மக்கள் தவறான முடிவை எடுத்து விட்டனர். தமிழகத்தில் வெற்றி கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வேம்.

தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள்; பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க