• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே ஒரு ஸ்மைலி ட்வீட்டில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கடுப்பாக்கிய அருண் விஜய்

May 18, 2019 தண்டோரா குழு

சீமராஜா, கனா படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘Mr.லோக்கல்’. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதுமட்டுமின்றி சதீஷ், ரோபோ சங்கர், ஆர்.ஜே பாலாஜி என ஒரு காமெடி பட்டாளமே உள்ளது.

இந்த திரைப்படம் கடந்த மே 17-ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. இதற்கிடையில் இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நேற்று நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரே ஒரு ஸ்மைலியோட ஒரு பதிவை போட்டிருந்தார். இந்த பதிவை பார்த்துட்டு எல்லாரும், அருண் விஜய் மிஸ்டர் லோக்கல் படத்தை தான் கலாய்க்கிறார்னு கிளப்பிவிட்டார்கள்.ஏற்கனவே, படம் நல்லா இல்லைனு கடுப்புல இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், இந்த பதிவை பார்த்துட்டு, அருண் விஜயை திருப்பி கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

இந்நிலையில், 3 மணி நேரத்திற்கு பிறகு அருண் விஜய் அந்த பதிவிற்கு விளக்கமளிக்கும் வகையில் மற்றொரு ட்வீட் செய்திருந்தார். அதில் “என்னோட அடுத்த படத்தோட அறிவிப்பு அடுத்த வாரம் வர இருக்கு, முந்தைய ட்வீட்டும் அது சமந்தப்பட்டதுதான், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. நான் என் வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க