‘அடங்க மறு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக இப்படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த அடிமை, ஆதிவாசி, 1990களில் வாழ்ந்த இளைஞர், ராஜா ஆகிய வேடங்களை உறுதிசெய்த படக்குழுவினர், மீதமுள்ள 5 வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குழப்பத்தில் உள்ள நோயாளி போல காட்சியளிக்கும் ஜெயம் ரவியை சுற்றி சமூக வலைதளங்களின் குறியீடுகள் உள்ளன. கோமாளி என்ற எழுத்துக்களில் 1990, 2000, 2005, 2010, 2013, 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாகவும், ரசிக்கும்படி உள்ளதாக ரசிகர்கள் #ComaliFirstLookஎன்ற ஹேஷ்டாகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு