• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

September 29, 2016 தண்டோரா குழு

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து,அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து முடித்துவிட்டது. திமுக நேற்றும் இன்றும் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

அதைபோல், இதர கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது மற்றும் காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதை கண்டித்தும் தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க