• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணியின் காத்திருப்பு பட்டியலில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட்!

April 17, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மே மாதம் 30 -ஆம் தேதி தொடங்கவுள்ள ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனர்.விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மாற்று வீரர்களுக்கான (காத்திருப்பு) பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இப்பட்டியலில் கலீல் அகமது, அவிஷ் கான், தீபக் சாஹர் ஆகிய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.போட்டி தொடர் நடைபெற்று வரும்போது, அணி வீரர்களுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு அல்லது காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களுக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் படிக்க