• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராம்குமாரின் தந்தை

September 27, 2016 தண்டோரா குழு

ராம்குமாரின் பிரேத ப‌ரிசோதனை‌ குழுவில் தனியார் மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்ட ராம்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது, அதற்கு பதிலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை நியமித்து உத்தரவிட்டது.

மேலும்,பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீடு செய்துள்ளார்.

மேலும் படிக்க