 April 10, 2019
April 10, 2019  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. 
கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது. 
இப்படத்தை ரஜினியின் 2.O படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே   தயாரிக்கிறது.  ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகம் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.