April 10, 2019 
தண்டோரா குழு
                                சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்து தோனி தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
12 ஐபிஎல் போட்டி துவங்கி லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாளை சென்னை அணி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.  இதற்காக சென்னை அணி, விமான நிலையத்திற்கு வந்தது.
இதற்கிடையில், தோனியும், அவரது மனைவி சாக்சியும் பயணிகள் அறையின் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலையில் விமானம் இருந்தால் இப்படி தான் இருக்கும்  என்ற வாசகத்துடன் தோனி சமூக வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.