• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாய்க்குப் பாடம் கற்பிக்க எட்டு குட்டி நாய்களைக் கொன்ற பெண்.

March 22, 2016 முகமது ஆஷிக்

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் முன்னாள் இராணுவத்தினர் குடியிருப்பு உள்ளது. அங்கு பொன்னம்மா என்பவர் வீட்டின் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கால்வாயில் குட்டிகளை ஈன்றதற்கு கோபடைந்த பொன்னம்மா, தாய் நாய்க்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகப் பிறந்து 15 நாட்களே ஆன நாய்க்குட்டிகளைக் கற்களால் அடித்துக் கொன்றுள்ளார்.

இதில் எட்டு குட்டிகளில் 7 குட்டிகள் உடனே இறந்துள்ளது. மற்றொன்று அடுத்த நாள் இறந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தொண்டு நிறுவன உதவியுடன் பொன்னம்மா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இறந்த குட்டிகளையும் அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், பொன்னாம்மாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதையடுத்து பொன்னாம்மாவின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. பொன்னம்மா, முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் உத்தரகாண்டில் எம்எல்ஏ ஒருவர் குதிரையின் காலை உடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பெங்களூருவில் பெண்ணொருவர் நாய்க்குட்டிகளைக் கொடூரமாக கொன்றிருப்பது விலங்கு நல ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குட்டிகள் இறந்து 5 நாட்கள் ஆகியும் அதை அடக்கம் செய்த இடத்தில் தாய் நாய் வந்து பார்த்து சென்று வருவது பார்ப்போரை மனம் கலங்க வைத்துள்ளது.

மேலும் படிக்க