 April 2, 2019
April 2, 2019  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இறுதியாக இவரது இயக்கத்தில் ஜோதிகா, ஜீவி பிரகாஷ் நடிப்பில்   நாட்சியார் படம் திரைக்கு வந்தது.
சில காரணங்களால் இவர் இயக்கிய வர்மா படத்தின் பகுதி முடிவுக்கு வந்தது. தரமான கதைக்கரு, கதா பாத்திரம் நிறைந்த பாலாவின் அடுத்த படைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பரதேசி, நாச்சியார் போன்ற படங்களில் இயக்குனர் பாலாவுடன் ஜிவி பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.