கோவை சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே குடிநீர் வினியோகம் சீராக வழங்க முடியும் என சுற்றுசுழல் ஆர்வலர்கள் கருத்து.
சிறுவாணி அணையில் 863 மீட்டர் வரை நிரந்தர நீர் இருப்பதாகவும்,அதிலிருந்து,15 மீட்டர் உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில் சிறுவாணி அணை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 29 வார்டுகளில் மூன்று லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தினமும் 10 கோடி லிட்டர் வரை குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை நிரம்ப வேண்டிய சிறுவாணி அணை, கடந்தாண்டு ஒருமுறை கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து,கடந்த,மே 4ம் தேதி நிரந்தர நீர் இருப்பு மட்டத்தை எட்டியது.
அணை நிரம்ப வேண்டிய இம்மாதத்தில், அணையினுள் உள்ள நீர்புகு கிணற்றில், மேலிருந்து இரண்டு வால்வுகள் நீர்மட்டத்துக்கு வெளியே உள்ளன. குடிநீருக்காக தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு பதிலாக, 6 கோடி லிட்டராக குறைத்து வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அணையின் நீர் இருப்பை கொண்டு, இதே நிலையில் இன்னும் 2 மாதம் வரை குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்கின்றனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். வடகிழக்கு பருவமழை கொடுத்தால் அடுத்தாண்டு மே மாதம் இறுதி வரையிலும் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது என சுற்றுசுழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு