• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – பாரிவேந்தர்

March 2, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில்,இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர்,

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் இருக்கும் சூழலில், பெரும் மாற்றம் தேவை அது ஸ்டாலின் மூலம் தான் ஏற்படும். பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லை அளித்து வந்த பாமகவும், இருப்பதால் அக்கூட்டணியில் நீடிக்கவில்லை என பாரிவேந்தர் குறிப்பிட்டார். மேலும், கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க