• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றியால் பெண்ணின் மானத்தைக் காத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

March 21, 2016 வெங்கி சதீஷ்

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதே கிடையாது என்ற நிலை உருவாகியது. குறிப்பாக பாகிஸ்தான் அணி வெற்றியின் விளிம்பில் இருக்கும் பொது கூட ஏதாவது ஒரு அதிசயம் நடைபெற்று இந்தியா அணி வெற்றி பெரும்.

இந்நிலையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 போட்டியில் கடந்த 19ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெற்றது. அதற்கு முன்பாக நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து பாக் மாடல் அழகி கண்டில் பலோச் என்பவர் அப்ரிடியை கடுமையாக விமர்ச்சனம் செய்தார்.

இந்நிலையில் இந்திய பாக் போட்டிக்கு முன் அவர் பேஷ்புகில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றால், தான் நிர்வாண நடனம் ஆடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் பாக் மாடல் அழகி நிர்வாண நடனம் ஆடுவதில் இருந்து தப்பினார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியின் தோல்வியை விமர்ச்சனம் செய்தும், இந்திய வெற்றியைப் பாராட்டியும் பல கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் பலர், இந்திய அணியினர் பெற்ற வெற்றிமூலம் தனது போட்டி நாடு என்றாலும் ஒரு மாடல் அழகியின் மானத்தைக் காப்பாற்றியுள்ளனர் எனப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினர் ஒரு பெண்ணின் மானத்தைக் காத்ததற்காக நன்றி என்று தெரிவித்தும் கிண்டலடித்துள்ளனர்.

மேலும் படிக்க