• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரசவத்திற்காக கர்ப்பிணி மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவர்

September 21, 2016 தண்டோரா குழு

ஒடிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக கணவர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாவட்டம் கன்ஷாரிகால கிராமத்தை சேர்ந்தவர் சம்பாரு பிரஷக். இவரது மனைவி பங்காரி பிரஷ்க் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பிரஷ்கவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையெடுத்து, அவரது குடும்பத்தினர் தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல 108 சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாராததால் மனைவியின் வேதனையை பார்த்த சம்பாரு பிரஷக் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தன் மனைவியை தனது தோள்பட்டையில் சுமந்து கொண்டு மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இச்சம்பவத்தை பார்த்த அனைவருக்கும் பரிதாப்பத்தை ஏற்படுத்தியது. இதையெடுத்து தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் கர்ப்பிணி மனைவியை தூக்கி கொண்டு வருவதை பார்த்து அவரிடம் இருந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.

இச்சம்பவம் புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அம்மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோல் ஒரு சம்பவம் ஓடிசாவில் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க