• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஸ்ரீதேவியின் திதி நிகழ்வில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்பு

February 14, 2019 தண்டோரா குழு

கடந்த ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து
கொண்டு மரியாதை செலுத்தினர்.

நடிகர் அஜித் தற்போது ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க