டென்னிஸ் விளையாட்டில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தாலும், அழகிய சிரிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் என்று தனக்கென அழியா இடம்பிடித்தவர் சானியா மிர்ஷா.
இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக்கை காலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தங்களது 8-ஆம் ஆண்டு திருமண நாளினை கொண்டாடிய இத்தம்பதியர் தற்போது தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினராக ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதையடுத்து, பாலிவுட் தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஆர்வம் காட்டிவருகிறது. இந்நிலையில், சானியா மிர்சாவின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது குறித்து தற்போது அதிகாரபூர்வமான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை சானியா மிர்ஷாவே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ரோனி ஸ்குருவாலா இயக்கவுள்ளாகவும், இதில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வேடத்தில் சானியா மிர்சாவே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சானிய மிர்சாவுடைய சிறு வயது வாழ்க்கை, டென்னிஸில் முன்னேறுவதற்காக செய்த போராட்டங்கள் என முக்கிய பகுதிகளை படமாக்கப்படவுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்