நாய்களை செல்ல பிராணிகளாக வைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம்.அவைகளோடு நேரத்தை செலவிட பலருக்கும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு.பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் தன் பால் ஈர்க்கும் குணம் உடையது.மனிதனின் உற்ற நண்பனாக விளங்குவதால் அவற்றை வீடுகளில் வளர்க்க மக்களுக்கு அதிக விருப்பம்.
ஸ்வன்சியா ஜென் – வில்லியம் தாமஸ் என்னும் தம்பதினருடன் தாவ் நதிக்கரையில் ஜாக் வாழ்ந்து வந்தது. ஒருமுறை இங்கிலாந்தின் தாவ் நதியில் சிறுவன் ஒருவன் தவறுதலாக விழுந்துவிட்டான். தூரத்தில் இருந்து அதை கவனித்த ஜாக் ஓடிச்சென்று போராடி அச்சிறுவனை நதிக்கரைக்கு கொண்டு சென்று காப்பாற்றியது.ஆனால்,அதை நேரில் பார்க்காததால் அந்த சிறுவன் சொன்ன போதும் யாரும் அதை நம்பவில்லை.
ஆனால், சில வாரங்களுக்கு பிறகு, நீச்சல் வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக அதே ஆற்றுப்பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அதை கண்ட ஜாக் உடனே சென்று அவர் சிக்கிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து அவரை விடுவித்து காப்பாற்றியது.அச்சம்பவத்தை பலரும் நேரில் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.தொடர்ச்சியாக சுமார் 27 மனிதர்களை தனியொரு நாயாக இருந்து ஜாக் அவர்களை காப்பாற்றியது.
ஜாக்கின் இந்த துணிச்சலும் மனிதாபிமான அந்த செயலைகளை கெளரவிக்கும் வகையில், அதற்கு “ஆண்டின் மிகவும் தைரியமான நாய்” என்னும் பட்டத்தையும், லண்டன் மேயரிடம் இருந்த வெள்ளிப் கோப்பையையும் , மற்றும் ஜாக்கை போல் செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் பரிசாக அதற்கு கொடுக்கப்பட்டது.
மேலும், மக்கள் மத்தியில் அக்கால நிஜ பேட்மேனாக திகழ்ந்தது. ஜாக்கின் நினைவாக அங்கு ஆரம்பிக்கப்பட்ட பிரீமியர் லீக் கால்பந்து அணிக்கு ஸ்வான்சீ எஃப்சிக்கு பதிலாக ‘ஸ்வான்சீ ஜாக்ஸ்’ என்னும் புனைப்பெயரை தருவதற்கு ஜாக் ஒரு உத்வேகமாக இருந்தது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்