• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி – டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம்

January 14, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. எனினும் பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில், இந்த தொடரை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் ரேட்டிங்கில் உயர்ந்து 110 புள்ளிகளை பெற்றது. இதனால், 2ம் இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் இந்திய அணியும் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க