• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்னி டெஸ்ட்: புஜாரா சதம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு

January 3, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், ராகுல் 9 ரன்களிலும் மயங்க் அகர்வால்77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்கு சதங்களை(2014) அடித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 1977-78 ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தில் போது மூன்று சதங்களை அடுத்துள்ளர். தற்போது சேதுஷ்வர் புஜாரா மூன்று சதங்களை அடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க