தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – 1/2 கிலோ
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 4
சிவப்பு மிளகாய் – 8
தனியா – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 1(முழு)
கசகசா – 1 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
கறி நன்கு வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும். சுவையான கிராமத்து கோழிக் குழம்பு தயார்.
குறிப்பு: தேங்காய் பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு