இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில்
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வெளியாகும் விஸ்வாசம் படத்திம் விநியோக உரிமையை யார் யார் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டில் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், கோவையில் வால் மார்ட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், சேலத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலும், நெல்லை மற்றும் குமரியில் ஸ்ரீராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனமும், மதுரையில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் வட ஆற்காடு – தென்னாற்காடு பகுதியில் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்