• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிக்கென விளையாட்டு பூங்கா

December 14, 2018 தண்டோரா குழு

கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்று திறனாளிக்கென விளையாட்டு பூங்கா அமைக்கும் பணியானது தீவிரம் அடைந்துள்ளது.

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்றுத்திறனாளியான சிறுவர்கள் விளையாடும் வகையில் கைகூ அமைப்பு சார்பாக விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு இன்று பணிகள் துவங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு பூங்காவிலும் மாற்றுத்திறனாளிகென விளையாடும் பொருட்கள் இருப்பதில்லை,இதை முன்னெடுக்கும் விதமாக
எங்கும் காணாத வடிவத்தில் புதிதாக அமைக்கபட வேண்டுமென்றும், குழந்தைகளுக்கு இயற்க்கை சூழலையும், விளையாட்டும் காண்பிக்கப்பட வேண்டுமென்றும், மற்ற குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்து விளையாடும் வண்ணமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி கரம் கொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள கைகூ என்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பணியானது இன்று முதல் தீவிரமடைந்துள்ளது.

இதில் சமூக ஆர்வளர்கள்,தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க