• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

December 13, 2018 தண்டோரா குழு

உடல் ஆரோக்கியத்தை பேணும் சைக்கிள் பயணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்து நோக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் டூர் ஆப் நீல்கிரிஸ் சாகச சைக்கிள் பயணம் உதகையில் இன்று நடைபெற்றது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் துவங்கிய இந்த பயணம் மடிக்கேரி, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி வழியாக தமிழகம் எல்லையான முதுமலை வழியாக இன்று உதகை வந்தடைந்தது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய 29 சர்வேதச வீரர்கள் உட்பட 110 வீரர்கள் இந்த சைக்கிள் சாகச பயணத்தில் பங்கேற்றனர்.

12 கி.மீ கல்லட்டி மலைப்பாதை பயணத்தில் 1230 மீட்டர் உயரத்துக்கு 36 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விரைவாக கடந்த சைக்கிள் வீரர் கிரண் குமார் ராஜீ சாதனை படைத்து பந்தயத்தின் ராஜாவாகவும் பெண்கள் பிரிவில் கட்ஜ்ஜா லில் ஜான்சன் பந்தயத்தின் ராணியாக பட்டங்களை வென்றுள்ளனர்.

உலகின் பல்வேறு இடங்களில் சைக்கிள் சாகசப் பயணம் மேற்க்கொண்டிருந்த போதிலும் செங்குத்தான கல்லட்டி மலைப்பாதையில் மேற்க்கொண்ட பயணம் தமக்கு பெரும் சவாலாகவும், மகிழ்ச்சி தரும் வகையில் இருந்ததாக பங்கேற்ற வீரர்கள் தெரிவித்தனர்.

17 பெண்கள் உட்பட 110 வீரர்கள் அடங்கிய இக்குழுவில் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, பிலிப்பனின்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 24 பேர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் 11வது ஆண்டாக நடைப்பெறும் இந்த சைக்கிள் பயணம், சைக்கிளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சைக்கிள் பயணத்தால் உடல் ஆரோக்கியம் பெற முடியும் என்பதையும், வாகன போக்குவரத்துக்கு பதில் சைக்கிள்களை அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முன் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க