• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

December 13, 2018 தண்டோரா குழு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா,டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, பெங்களூர், ஐதராபாத், புதுச்சேரி என 187 இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், சோதனை பற்றிய விவரங்கள் வரவில்லை. இந்நிலையில், வருமான வரிசோதனை தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடல் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிக்கலாவிடம் சென்னை வருமான வரித்துறையினர் 5 பேர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க