• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும்  விக்னேஷ் சிவன் டுவீட்

December 12, 2018

டிஜிட்டல் இந்தியா என்று வளர்ச்சியை நோக்கிய மக்கள் பயணித்து கொண்டு இருகின்றனர் . மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் 'ஆன்லைன் ஷாப்பிங்' முலம் இருக்கும் இடத்துக்கே வர வைத்து கொள்கின்றனர். இப்போது உணவை கூட ஆன்லைனில் வாங்கும் பழக்கம் மக்களிடையா அதிகரித்து வருகிறது.

மக்கள் தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி டெலிவரி செய்வதற்கு 'டெலிவரி பாய்ஸ்' என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினகளுக்கு முன்பு உணவு டெலிவரி செய்யும் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்ய வேண்டிய உணவை கொஞ்சம் எடுத்து டெலிவரி பாய் ஒருவர் சாப்பிடுகிறார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது .

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரையும், அந்த நிறுவனத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் இதை அட்டூழியம் என்றும் சமூகவலைதளங்களில் பேசினர்.

இதற்கு பலரும் எதிர் மறையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன்  டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன், ட்விட்டர் பதிவில்  “பொறுமையை மறக்கடித்த பசியின் கொடுமை பாவம் அவரை மன்னியுங்கள். மறந்து விடுங்கள். அட்டூழியம் அல்ல. பசி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க