ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக கடந்த 2016 ஆம் ஆண்டு உர்ஜித் படேல் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். உர்ஜித் படேல் பதவி விலகல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். அவர் வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார் என பதிவிட்டுள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு