• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடும் ஊர் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

December 8, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் ஆங்கில பெயர்களை குறிப்பிடும் ஊர்களின் பெயர் தமிழில் மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தேச பக்தி விழா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,

தமிழகத்தில் அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட ஊர் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது. இதனை தமிழ் பெயர்களாக மாற்றுவதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க