• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் நில உரிமைக் கூட்டமைப்பு சார்பில் நிவாரணம்

December 8, 2018 தண்டோரா குழு

தமிழக மக்கள் நில உரிமைக்கூட்டமைப்பு சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கஜா புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்புயலின் தாக்கத்தால் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக மக்கள் நில உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள காமனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலையன்காடு கிராமத்தில் வசிக்கும் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு தேவையான பாத்திரங்கள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், பெட்ஷீட், ஒரு செட் துணிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து TPFLRன் மாநில நிர்வாகி சுப்ரமணிய சிவா கூறுகையில்,

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் மலை உச்சி கிராமத்துக்கு யாரும் போவது இல்லை அங்கு வாழும் மக்களுக்கு அந்த உதவிகள் சரியாக போய் செர்வதில்லை. கொடைக்கானல் காமனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலையன்காடு கிராம மலை பகுதியில் உள்ள மக்களுக்கு இதுவரை எந்த நிவாரண நிதியும் வந்து சேரவில்லை விடுகளின்றி உணவுன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பெரிதாக யாரும் நிவாரணப் பொருட்களை வழங்கவில்லை. இதனால், தமிழக மக்கள் நில உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்க்கையை தொடரத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு டின் ஷீட்கள் விரைவில் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்த நிவாரண நிதி வழங்கும் போது தாசில்தார் காளிமுத்து, மலை அமைப்பாளர் அன்பழகன், TPFLRன் மாநில நிர்வாகிகள் சிவா, அஷோக்ராஜ், செல்வகுமார், மாநிலக்குழு உறுப்பினர் கோரன்கொம்பு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க