• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

December 8, 2018 தண்டோரா குழு

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டுமென கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை கீரணத்தம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது. அம்பேத்கார் உருவ படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவது அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தேச தந்தை காந்தி இல்லை, அம்பேத்கர் தான் என்று கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா பாணியில் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையேனில் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி மிகப்பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சிணை ஏற்படும் என்றார்.

மேலும், கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும். கொமதேக – திமுக கூட்டனியில் தொடர்கிறது. கொங்கு மண்டலத்தில் 12 தொகுதிகளிலும் செயல்பாடுகள் நடந்து வருகிறது. முகவர்களை நியமிக்கும் பணியை துவங்கியுள்ளோம். மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான விசயம் மேகதாது பிரச்சணையில் தமிழக முதல்வர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் படிக்க