• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முன்னால் மாணவிகள் சந்திப்பு

December 8, 2018 தண்டோரா குழு

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முன்னால் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை அவினாசி சாலையில் பி.எஸ் ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிக பழமையும்,பாரம்பரியம் மிக்க இந்த மகளிர் கல்லூரியில் பயின்ற மாணவிகள் பலர் வெளிநாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக ‘ பெர்பிள் லே அவுட்’ எனும் தலைப்பில் முன்னால் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி செயலர் யசோதா தேவி வரவேற்று பேசிய இதில் சிறப்பு விருந்தினராக அவினாசிலிங்கம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் ஷீலா ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்நாள் சாதனையாளர்களான இக்கல்லூரியின் முன்னால் மாணவிகளுக்கு சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது இந்த கல்லூரியே என வாழ்த்தி பேசினார். தொடர்ந்து சிறந்த முன்னால் மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் நிர்மலா உட்பட, வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கல்லூரயின் முன்னால் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க