• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சோமையம்பாளையம் பகுதியில் ஊருக்குள் துழைந்த 12 காட்டு யானைகள்

December 8, 2018 தண்டோரா குழு

கோவை சோமையம்பாளையம் பகுதியில் ஊருக்குள் 12 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் கூட்டங்கூட்டமாக உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளை கடந்து ஒரு முட்காட்டில் நின்றுள்ளன. யானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர் யானைகளை விரட்ட போராடி வருகின்றனர். இதேபோல தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க