• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கமிஷனர் அலுவலகத்தில் திருப்பூரைச் சேர்ந்த இளம் காதல்ஜோடி தஞ்சம்

December 6, 2018 தண்டோரா குழு

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் பெற்றோர் கௌரவ கொலை செய்து விடுவேன் என பெண்ணை மிரட்டுவதாக கூறி இளம் காதல் தம்பதியர் கோவை மாநகர காவல் துறையில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்த அழகர்சாமியின் மகன் வசந்தகுமார் திருப்பூரிலுள்ள பிரபல செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.இவர் திருப்பூர் புதுரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான பிச்சைமணி என்பவரது மகளான ரம்யாவை தனது பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் வீட்டில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி சென்ற இருவரும் கோவைக்கு வந்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கௌரவ கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று கூறி இளம் காதல் தம்பதியர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து ஆணையர் உத்தரவின் பேரில் காந்திபுரம் பகுதியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
மேலும் மணமகன் வசந்தகுமாருக்கு 21 வயதே ஆகியுள்ளதால் திருமணத்தை பதிவு செய்ய இயலாமல் இருப்பதாகவும் இதனை பயன்படுத்தி பெண் வீட்டார் இருவரையும் பிரிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறிய அப்பெண் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க