• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

December 6, 2018 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோவையில் உள்ள தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது, பாபர் மசூதி இடித்த இடித்ததில் மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க