• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முன்னிலையில் திருப்பூர் நகரம்

December 6, 2018 தண்டோரா குழு

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள் தான் உள்ளது. உலக அளவில் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் நகரம் சாதனை படைத்து இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் இருக்கிறது. இரண்டாவது ஆக்ரா, அதை தொடர்ந்து பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

திருப்பூர் சாதனை:

இப்பட்டியலில் திருப்பூர் நகரம் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. திருப்பூரின் வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக உள்ளது. இதனால் திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இதுமட்டுமின்றி இப்பட்டியலில் திருப்பூர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு முன்னாள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை இதில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை 8.17 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. சென்னையைவிட திருப்பூர் 0.19 சதவிகிதம் அதிகம் பெற்று உள்ளது.அதேபோல் இதில் திருச்சியும் பெரிய சாதனை படைத்து இருக்கிறது. திருச்சி இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது. திருச்சி 8.29 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. திருச்சியும் சென்னையை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலகின் பெரிய நகரங்ளான நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களை விட திருப்பூர் அதிக வளர்ச்சியை பெற்று இருக்கிறது. அதேபோல் திருச்சியும், சென்னையும் கூட, இதில் கவனிக்க தகுந்த இடத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க